கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர் : சிக்கபல்லாபூரில், பைக்கை திருட முயற்சித்த கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, கொள்ளையர் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.சிக்கபல்லாபூர் மாவட்டம் மரவேனஹள்ளியில் இரு கொள்ளையர்கள் பட்டப்பகலில் பைக் திருட முயற்சித்தனர். இதை பார்த்த கிராமத்தினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர்.அப்போதும் சற்றும் எதிர்பாராமல் கிராமத்தினர் மீது, கை

சிக்கபல்லாபூர் : சிக்கபல்லாபூரில், பைக்கை திருட முயற்சித்த கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, கொள்ளையர் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

சிக்கபல்லாபூர் மாவட்டம் மரவேனஹள்ளியில் இரு கொள்ளையர்கள் பட்டப்பகலில் பைக் திருட முயற்சித்தனர். இதை பார்த்த கிராமத்தினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர்.அப்போதும் சற்றும் எதிர்பாராமல் கிராமத்தினர் மீது, கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பைக்கில் தப்பியோடி விட்டனர்.இதில், கங்காதர், 48, என்பவர் வயிற்றில் தோட்டா துளைத்து படுகாயமடைந்தார். அவர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இது போன்ற சம்பவம் சிக்கபல்லாபூரில் நடந்திருப்பது இதுவே முதல் முறை. தகவலறிந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி., மிதுன்குமார், சம்பவ இடத்துக்கு வந்து கிராமத்தினருக்கு ஆறுதல் கூறி, நம்பிக்கை ஊட்டினார்.கொள்ளையர்களை பிடிக்க, சிக்கபல்லாபூர் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X