திண்டுக்கல் சிறப்பு ரயில்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் சிறப்பு ரயில்கள்

Added : செப் 29, 2021
Share
திண்டுக்கல் : 'அக்.1 முதல் திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் தெரிவித்தது: அக்.1 முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சில ரயில்கள் வழக்கத்தை விட 10 நிமிடங்கள் முன்னதாக கிளம்ப உள்ளன.திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் மைசூரு - துாத்துக்குடி காலை 6:25 மணி,

திண்டுக்கல் : 'அக்.1 முதல் திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்தது: அக்.1 முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சில ரயில்கள் வழக்கத்தை விட 10 நிமிடங்கள் முன்னதாக கிளம்ப உள்ளன.திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் மைசூரு - துாத்துக்குடி காலை 6:25 மணி, நாகர்கோவில் - பெங்களூரு அதிகாலை 1:00 மணி, பெங்களூரு-நாகர்கோவில் அதிகாலை 1:55 மணி, திருநெல்வேலி-தாதர் காலை 11:00 மணி, நாகர்கோவில்-கோவை இரவு 11:25 மணி, பாலக்காடு-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் இரவு 7:40 மணி, மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல்-பாலக்காடு காலை 6:05 மணிக்கும் புறப்படும்.

இதேபோல் சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில் காலை 6:40 மணி, நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., சிறப்பு ரயில் மதியம் 12:05 மணி, மறுமார்க்கத்தில் மும்பை - நாகர்கோவில் அதிகாலை 5:25 மணி, ஹஸ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி இரவு 10:35 மணி, கன்னியாகுமரி - ஹவுரா மதியம் 12:05 மணி, மதுரை - சண்டிகர் நள்ளிரவு 12:35 மணி, சண்டிகர் - மதுரை மதியம் 12:25 மணி, ஹஸ்ரத் நிஜாமுதீன் மதுரை இரவு 10:35 மணி, பிகானீர் - மதுரை மாலை 5:05 மணிக்கும் புறப்படும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X