ஆமை வேகத்தில் ரோடு பணி , கழிவுகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்| Dinamalar

ஆமை வேகத்தில் ரோடு பணி , கழிவுகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்

Added : செப் 29, 2021
Share
தேனி : ஆமை வேகத்தில் ரோடு பணி, எரியாத தெருவிளக்குகளால் இருள் சூழ்ந்த தெருக்கள், குழாய் அமைக்காததால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம், கார்பன்' கழிவுகளை பாழடைந்த கிணற்றில் கொட்டி ஊராட்சி எரிப்பதால் மூச்சுத்திணறலில் பொதுமக்கள் அவதிப்படுவதாக தேனி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஸ்ரீராமலிங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் குமுறுகின்றனர்.இவ்

தேனி : ஆமை வேகத்தில் ரோடு பணி, எரியாத தெருவிளக்குகளால் இருள் சூழ்ந்த தெருக்கள், குழாய் அமைக்காததால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம், கார்பன்' கழிவுகளை பாழடைந்த கிணற்றில் கொட்டி ஊராட்சி எரிப்பதால் மூச்சுத்திணறலில் பொதுமக்கள் அவதிப்படுவதாக தேனி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஸ்ரீராமலிங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

இவ் ஊராட்சியின் முதல் வார்டு விரிவாக்கப்பகுதியில் ராமலிங்கா நகர் குடியிருப்புக்கள் உள்ளன. இங்கு மெயின்ரோடு உள்பட 10 குறுக்குத் தெருக்கள் உள்ளன. நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.குமரேசன், செயலாளர் ஆர்.மாரிமுத்து, பொருளாளர் எம்.சேதுராமன், கவுரவு ஆலோசகர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உறுப்பினர்கள் செல்வராஜ், பிரகாஷ், முத்துக்குமரேசன், ராஜகோபால், மாரியப்பன், அன்பழகன், ராஜ்குமார், கதிரேசன், முத்துக்கிருஷ்ணன், நாகராஜ், கிருஷ்ணசாமி கூறியதாவது: குடிநீருக்காக தவிப்புவீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாததால் மாதம் தலா ரூ.2 ஆயிரத்திற்கு குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். மத்திய அரசின் ஜல் ஜீவன்' திட்டத்தில் என்.ஜி.ஓ., காலனி மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை முடித்து விரைவில் குடிநீர் வழங்க வேண்டும். பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தடுப்பு வேலி அமைத்து விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும்.மின்சார ஒயர் திருட்டுராமலிங்காநகர் மெயின் ரோடு, குறுக்குத்தெருக்களில் 14 மின்கம்பங்கள் உள்ளன. இதில் ஒன்றில் கூட விளக்குகள் பொருத்தவில்லை. தெருக்களில் இரவில் மக்கள் நடமாடவும், தனியார் மில் பணிக்கு சென்று இரவில் திரும்பும் பெண்கள் அச்சமடைகின்றனர். மின்கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் காப்பர் ஒயர்களை திருடும் கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும். பைபாஸ் ரோட்டை இணைக்கும் ராமலிங்கா நகர் மெயின்ரோட்டில் இருபுறமும் மண் கொட்டி மெத்தியுள்ளனர். தார்ரோடு அமைக்க ஊரக வளர்ச்சி முகமை ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் சுணக்கமாக உள்ளது. விரைவில் தார்ரோடு அமைத்து கழிவுநீரோடை வசதி ஏற்படுத்த வேண்டும்.மூச்சுத்திணறல்குடியிருப்புப் பகுதியில் இருந்து அன்னஞ்சி பைபாஸ் இணைப்பு ரோட்டிற்கு அருகில் பாழடைந்த கிணறு உள்ளது. அதில் ஊராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கொட்டி தீ வைப்பதால் புகை மாசு ஏற்பட்டு, அப்பகுதி குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. தனியார் தொழிற்சாலைகள் சாம்பல் மற்றும் கார்பன்' கழிவுகளை கொட்டி செல்வதால் காற்று மாசுபட்டு சுவாச பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் கிணற்றை மூடி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை பிரிக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X