மதுரை - திருப்பதிக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை - திருப்பதிக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்

Added : செப் 29, 2021
Share
பழநி : மதுரை - திருப்பதிக்கு பழநி, கோவை வழியாக ரயில் இயக்க வேண்டும்' என, ரயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்திஉள்ளது.பழநியில் ரயில் உபயோகிப்பாளர் சங்க விழா நடந்தது. இதில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ரயில் நிலையங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். பழநி, ஈரோடு வழித்தடத்தை செயல்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம்- - சென்னை - -திண்டுக்கல்- - திருச்சி வழியாக பகல் நேர ரயில்

பழநி : மதுரை - திருப்பதிக்கு பழநி, கோவை வழியாக ரயில் இயக்க வேண்டும்' என, ரயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்திஉள்ளது.

பழநியில் ரயில் உபயோகிப்பாளர் சங்க விழா நடந்தது. இதில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ரயில் நிலையங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். பழநி, ஈரோடு வழித்தடத்தை செயல்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம்- - சென்னை - -திண்டுக்கல்- - திருச்சி வழியாக பகல் நேர ரயில் இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம்- - தாம்பரம்- - திருச்சி- - தஞ்சாவூர் வழியாக இரவு ரயில், மேட்டுப்பாளையம்- - ராமேஸ்வரம் ரயில் இயக்கப்பட வேண்டும்.மேலும் மேட்டுப்பாளையம்- - திருச்செந்தூர் ரயில், கோயம்புத்தூர் - -திண்டுக்கல் பயணிகள் ரயில், கோயம்புத்தூர் - -மதுரை பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும்.

மதுரை, திருப்பதியை இணைக்க திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, போத்தனூர், கோயம்புத்தூர், ரேணிகுண்டா வழியாக ரயில் இயக்க வேண்டும். பழநியில் புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் கவுரவத் தலைவர் ஹரிஹர முத்து, கவுரவ செயலாளர் பெருமாள் நாதன், செயலாளர் பச்சமுத்து, பொள்ளாச்சி சங்கச் செயலாளர் சிவமோகன் உள்பட பலர் பங்கேற்றனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X