பொது செய்தி

இந்தியா

பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா ராஜினாமா

Added : செப் 29, 2021
Share
Advertisement
துமகூரு : ஆர்.எஸ்.எஸ்.,க்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா, மாவட்ட தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.துமகூரு ரூரல் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா. இவர் மாவட்ட பா.ஜ., தலைவர் பதவியும் வகித்து வருகிறார்.இவர் தனது நெருக்கமானவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அந்த

துமகூரு : ஆர்.எஸ்.எஸ்.,க்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா, மாவட்ட தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

துமகூரு ரூரல் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா. இவர் மாவட்ட பா.ஜ., தலைவர் பதவியும் வகித்து வருகிறார்.இவர் தனது நெருக்கமானவர்களுடன் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அந்த 'வீடியோ' காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.இதை பார்த்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பா.ஜ., தலைவர்கள் உத்தரவின் படி, மாவட்ட தலைவர் பதவியை, நேற்று முன்தினம் இரவு திடீரென ராஜினாமா செய்தார்.இது, துமகூரு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், எதற்காக பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் மறுத்து விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X