லஞ்சம் கேட்ட ஊழியர் கைது| Dinamalar

லஞ்சம் கேட்ட ஊழியர் கைது

Added : செப் 29, 2021
Share
பெங்களூரு : பெங்களூரில் போலீசார் துாக்கிச் சென்ற வாகனத்தை விடுவிக்க, லஞ்சம் கேட்ட ஊழியரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு மல்லேஸ்வரத்தை சேர்ந்த அசோக், 45, என்பவர் நேற்று முன்தினம் ஜே.பி.,நகரில் தனியார் ஓட்டல் முன், தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.அவர் வெளியில் வருவதற்குள், போலீசாருக்கு உதவி புரியும், 'டோயிங்' ஊழியர்கள் வாகனத்தை துாக்கிச் சென்றனர். இதனால்

பெங்களூரு : பெங்களூரில் போலீசார் துாக்கிச் சென்ற வாகனத்தை விடுவிக்க, லஞ்சம் கேட்ட ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தை சேர்ந்த அசோக், 45, என்பவர் நேற்று முன்தினம் ஜே.பி.,நகரில் தனியார் ஓட்டல் முன், தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.அவர் வெளியில் வருவதற்குள், போலீசாருக்கு உதவி புரியும், 'டோயிங்' ஊழியர்கள் வாகனத்தை துாக்கிச் சென்றனர். இதனால் வாகனத்தை மீட்க ஜெயநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு 'டோயிங்' கட்டணம் 1,150 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் ஊழியர்கள் 800 ரூபாய் கொடுத்தால் போதும்; வாகனத்தை விட்டு விடுகிறோம் என 'டோயிங்' ஊழியர் சித்தேகவுடா கூறினார்.இது குறித்து அசோக், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். ஊழியர் சித்தே கவுடா பணம் வாங்கிய போது, அதிகாரிகள் கைது செய்தனர்.ஜெயநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X