கட்டாய மதமாற்றம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை; முதல்வர் பசவராஜ் பொம்மை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கட்டாய மதமாற்றம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை; முதல்வர் பசவராஜ் பொம்மை

Added : செப் 29, 2021
Share
பெங்களூரு : ''கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் நேற்று தெரிவித்தார்.பெங்களூரு பேட்ரஹள்ளியில் நாராயணசாமி என்பவர் வீட்டில், 80க்கும் அதிகமான குழந்தைகளுக்கு வேறு மதம் சார்ந்த பாடம் நடத்தி, மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான 'வீடியோ' வெளியாகியுள்ளது.இது

பெங்களூரு : ''கட்டாய மதமாற்றம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் நேற்று தெரிவித்தார்.

பெங்களூரு பேட்ரஹள்ளியில் நாராயணசாமி என்பவர் வீட்டில், 80க்கும் அதிகமான குழந்தைகளுக்கு வேறு மதம் சார்ந்த பாடம் நடத்தி, மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான 'வீடியோ' வெளியாகியுள்ளது.இது குறித்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரில் நேற்று கூறியதாவது:கட்டாய மதமாற்றத்தை எந்த காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்கனவே கூறியது போல, கட்டாய மதமாற்றத்தை தடுக்க கடும் விதிமுறைகள் கொண்ட சட்டம் கொண்டு வரப்படும்.ஆசை வார்த்தை கூறியும், துாண்டி விட்டும் மதமாற்றம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X