பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரி செய்திகள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கணிதத்துறை பவள விழாவிருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் கணித துறையின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாட்டம் நடந்தது. கணித துறை தலைவர் மோகன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் வன்னியானந்தம் தலைமை வகித்தார். முதல்வர் சுந்தரபாண்டியன், கணிதவியல் துறை பேராசிரியர் பேச்சியம்மாள், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கணிதவியல் துறை பேராசிரயர் கண்ணன் பேசினர். மாணவி

கணிதத்துறை பவள விழா

விருதுநகர்:


விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் கணித துறையின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாட்டம் நடந்தது. கணித துறை தலைவர் மோகன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் வன்னியானந்தம் தலைமை வகித்தார். முதல்வர் சுந்தரபாண்டியன், கணிதவியல் துறை பேராசிரியர் பேச்சியம்மாள், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கணிதவியல் துறை பேராசிரயர் கண்ணன் பேசினர். மாணவி தீபிகா நன்றி கூறினார்.

இணையவழி கருத்தரங்கம்

விருதுநகர்:


விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் புற்றுநோயாளி நலன், ரோஸ் தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் இணைய வழியில் புற்றுநோய்க்கான சிறந்த மருத்துவம் எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. துறை தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். சுயநிதி பாடபிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், திருச்சி பாரதிதாசன் பல்கலை இணை பேராசிரியர் அச்சிராமன், சிங்கப்பூர் நேஷனல் பல்கலை மரபியல் துறை தலைவர் சிலம்பரசன், விலங்கியல் துறை பேராசிரயர் கண்ணன் பேசினர். பேராசிரியர் பால்பெருமாள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் விஜயலலிதா, சண்முகப்ரியா, கோவிந்தராஜன், சித்ரா செய்தனர்..............

இணையவழி கருத்தரங்கு

அருப்புக்கோட்டை:எஸ்.பி.கே.. கல்லூரியில் பெண்கள் அமைப்பு சார்பாக சமூக வலைதளங்கலால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ற தலைப்பில், பன்னாட்டு அளவிலான இணையவழி கருத்தரங்கு நடந்தது.கல்வி குழும தலைவர் சுதாகர் ஆலோசனை வாங்கினார். முதல்வர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தனசுபா வரவேற்றார். சிங்கப்பூர் அசன்சர் சவுத் ஈஸ்ட் ஏசியா டிஜிட்டல் பிசினஸ் இன்டகிரேஷன் கன்சல்டன்ட் பவித்ரா தங்கராஜ் பேசினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் வனிதா, பாண்டிச்செல்வி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X