பொது செய்தி

தமிழ்நாடு

சருகனியாற்றில் ஆக்கிரமிப்பு; அகற்றி சீரமைப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
சிவகங்கை : சருகனியாற்றில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சீரமைக்கும் பணியைஅமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சருகனியாறு வடிநிலக்கோட்டம் சார்பில் சீரமைக்கும் பணி தொடக்க விழாவிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார்.அமைச்சர் பணியினை தொடங்கி வைத்து பேசியதாவது: சருகனியாறு, மணிமுத்தாறு தொடக்கம் அலவாக்கோட்டை

சிவகங்கை : சருகனியாற்றில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சீரமைக்கும் பணியைஅமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சருகனியாறு வடிநிலக்கோட்டம் சார்பில் சீரமைக்கும் பணி தொடக்க விழாவிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார்.அமைச்சர் பணியினை தொடங்கி வைத்து பேசியதாவது: சருகனியாறு, மணிமுத்தாறு தொடக்கம் அலவாக்கோட்டை பெரிய கண்மாயிலிருந்து தொடங்குகிறது. 63 கி.மீ., துாரம் மாவட்டத்தின் வழியாக சென்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை சென்றடைகிறது.ஆற்றின் தொடக்கப்பகுதி 20 மீட்டர் அகலமும் பல இடங்களில் 70 முதல் 150 மீட்டர் அகலம் கொண்டதாகவும் செல்கிறது. ஆற்றின் குறுக்கே 11 தடுப்பணைகள் உள்ளன. 123 கண்மாய்கள் மூலம் 7810.65 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சருகனியாறு, மணிமுத்தாறு, வைகை ஆறு மற்றும் பெரியாறு பாசன கால்வாய்களில் மழைக்காலத்தில் தண்ணீர் முழுமையாக செல்ல சீரமைப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, முட்புதர் அகற்றப்பட்டு வருகின்றன.அந்தந்தப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புடன் சீரமைப்பு பணிகளில் பங்கேற்று பாசன வசதி பெற உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார்.செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் முத்துராமலிங்கம், கண்ணன், ராஜலட்சுமி, அமுதசுரபி, முன்னாள் அமைச்சர் தென்னவன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X