பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் கொடிக்கம்பம் அகற்றம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே வைக்கப்பட்டிருந்த பா.ஜ., தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது.காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ., கொடிக்கம்பம் ஊன்றப்பட்டது. நேற்றுமுன்தினம் அருகிலேயே தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கொடிக்கம்பம் ஊன்றப்பட்டது.இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில், போலீசார் கொடிம்பத்தை

காரைக்குடி : காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே வைக்கப்பட்டிருந்த பா.ஜ., தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது.

காரைக்குடி முத்துப்பட்டினம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ., கொடிக்கம்பம் ஊன்றப்பட்டது. நேற்றுமுன்தினம் அருகிலேயே தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கொடிக்கம்பம் ஊன்றப்பட்டது.இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில், போலீசார் கொடிம்பத்தை அகற்ற வலியுறுத்தினர். பா.ஜ., மற்றும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த பலர் கூடினர்.

தமிழக மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கொடிக்கம்பம் முன்னதாக ஊன்றப்பட்டதாகவும், தேர்தல் காரணமாக கொடிக்கம்பம் அகற்றப்பட்டு மீண்டும் தற்போது ஊன்றப்பட்டதாக தெரிவித்தனர்.டி.எஸ்.பி., இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இரு கட்சியினரும் கொடிகளை எடுத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X