பொது செய்தி

இந்தியா

பெங்களூரில் இடியும் நிலையில் 214 கட்டடங்கள் அலட்சியத்துடன் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி எல்லையில், எந்த நேரத்திலும் விழும் நிலையில், 214 சிதிலமடைந்த கட்டடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்தாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதால், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.பெங்களூரு நகரின் லக்கசந்திராவில் மூன்று மாடி கட்டடம் விரிசல் ஏற்பட்டு நேற்று முன்தினம் திடீரென சரிந்தது. அதிர்ஷ்ட
பெங்களூரில் இடியும் நிலையில் 214 கட்டடங்கள் அலட்சியத்துடன் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள்


பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி எல்லையில், எந்த நேரத்திலும் விழும் நிலையில், 214 சிதிலமடைந்த கட்டடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றை அப்புறப்படுத்தாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதால், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.பெங்களூரு நகரின் லக்கசந்திராவில் மூன்று மாடி கட்டடம் விரிசல் ஏற்பட்டு நேற்று முன்தினம் திடீரென சரிந்தது. அதிர்ஷ்ட வசமாக அந்த கட்டடத்தில் வசித்த அனைவரும் முன் கூட்டியே, வெளியேற்றப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதற்கிடையில், டெய்ரி சதுக்கம் அருகில் உள்ள கே.எம்.எப்., ஊழியர்களின் குடியிருப்பின் பழங்கால கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது.

இதனால், பதற்றம் ஏற்பட்டது./ கணக்கெடுப்பு / விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து பெங்களூரு மாநகராட்சி தரப்பில் கணக்கெடுப்பு நடத்த, சில மாதங்களுக்கு முன் அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட எட்டு மண்டலங்களிலும் கணக்கெடுக்கப்பட்டது.அதன்படி, எலஹங்கா - 67, பெங்., கிழக்கு - 53, பெங்., மேற்கு - 53, பெங்., தெற்கு - 38, மஹாதேவபுரா - 3 என மாநகராட்சி பகுதியில் 214 கட்டடங்கள் சிதலமடைந்துள்ளன. இவை எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளன.நாளுக்கு நாள் புதிய கட்டடங்கள் அதிகரித்து கொண்டே உள்ளன. அதிலிருந்து வருவாய் பார்க்கும் மாநகராட்சி அதிகாரிகள், சிதிலமடைந்த கட்டடங்களால் ஏற்படும் அபாயத்தை உணராமல் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகு தான், அதிகாரிகள் விழித்து கொள்வர் என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, விழும் அபாயத்தில் இருக்கும் கட்டடங்களை, அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னரே, அதில் வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர்.சிதிலமடைந்த வீட்டு உரிமையாளர்கள் பலருக்கும் 'நோட்டீஸ்' அனுப்பியும், இதுவரை அப்புறப்படுத்தாமல் உள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறுகின்றனர்.

* அதிர்ச்சி இது குறித்து, லக்கசந்திராவில் நேற்று முன்தினம் கட்டடம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது:கட்டடம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தான் அந்த சாலையில் நடந்து சென்றேன். கடவுள் புண்ணியத்தால் ஆபத்திலிருந்து தப்பித்தேன்.எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருப்பதாக வீட்டு உரிமையாளருக்கு பல முறை கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் யார் பொறுப்பு.பெங்களூரில் விழும் நிலையில் உள்ள சிதிலமடைந்த கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்தி அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X