பொது செய்தி

தமிழ்நாடு

சத்யா நகரில் சாக்கடை, பாலம் சீரமைப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
சிவகாசி : திருத்தங்கல் சத்யா நகரில் தினமலர் செய்தி எதிரொலியாக தெருக்கள் முழுவதும் சாக்கடை துார்வாரப்பட்டது. பள்ளி செல்லும் ரோட்டில் சேதமடைந்த பாலமும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.சத்யா நகர், கே.கே. நகர் மேற்கு, முனீஸ்வரன் காலனி தெருக்களில் சாக்கடை துார்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது. சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் தெருக்களில் ஓடியது.

சிவகாசி : திருத்தங்கல் சத்யா நகரில் தினமலர் செய்தி எதிரொலியாக தெருக்கள் முழுவதும் சாக்கடை துார்வாரப்பட்டது. பள்ளி செல்லும் ரோட்டில் சேதமடைந்த பாலமும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

சத்யா நகர், கே.கே. நகர் மேற்கு, முனீஸ்வரன் காலனி தெருக்களில் சாக்கடை துார்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது. சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் தெருக்களில் ஓடியது. முனீஸ்வரன் காலனி ஒன்றிய தொடக்கப் பள்ளி ரோடு பாலம் சேதமடைந்திருந்தது. இது தொடர்பாக தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் நேற்று செய்தி வெளியானது.

நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி அனைத்து தெருக்களிலும் உள்ள சாக்கடைகளும் துார்வாரப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டது. கழிவுநீர் தேங்காமல் ஓடியது. முனீஸ்வரன் காலனி பள்ளி ரோடு பாலமும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் எளிதில் சென்று வந்தன. சுகாதார ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையாளர்கள் ஆசீர்வாதம் செல்வம் பணியினை பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X