ஹிந்து வாலிபரின் காரில் முஸ்லிம் மாணவி சென்றதால் தாக்குதல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
தட்சிண கன்னடா : ஹிந்து வாலிபரின் காரில் முஸ்லிம் மாணவி சென்றதை கண்டித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மங்களூரிலும் நடந்துள்ளது.பெங்களூரில் சில நாட்களுக்கு முன் வங்கி ஊழியரான முஸ்லிம் பெண் ஒருவர், சக ஊழியரான ஹிந்து வாலிபருடன் இரவில், இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார்.இவர்களை இரண்டு பேர் வழிமறித்து தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தட்சிண கன்னடா : ஹிந்து வாலிபரின் காரில் முஸ்லிம் மாணவி சென்றதை கண்டித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மங்களூரிலும் நடந்துள்ளது.

பெங்களூரில் சில நாட்களுக்கு முன் வங்கி ஊழியரான முஸ்லிம் பெண் ஒருவர், சக ஊழியரான ஹிந்து வாலிபருடன் இரவில், இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார்.இவர்களை இரண்டு பேர் வழிமறித்து தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதே போன்ற சம்பவம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரிலும் நடந்துள்ளது தாமதமாக தெரிய வந்துள்ளது.

மங்களூரு மருத்துவ கல்லுாரியில் படிக்கும் ஹிந்து மாணவரும், முஸ்லிம் மாணவியும் காரில் உடுப்பி சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.மங்களூரு அருகே உள்ள சூரத்கல் அருகே சென்ற போது சிலர் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதை பார்த்த சூரத்கல் இன்ஸ்பெக்டர் ஹரிஷ், அவர்களை தடுக்க முயன்றார். அந்த கும்பல் அவரையும் தாக்க முயன்றுள்ளது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள, சூரத்கல் போலீசார், ஐந்து பேரை கைது செய்துள்ளனர். பெங்களூரில் சில நாட்களுக்கு முன், காரில் ஹிந்து நபருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணை மிரட்டி, ஐந்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் போலீசில் சிக்கியுள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதால், பெங்களூரு மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X