பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரியில் 100 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

Added : செப் 29, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில் 2021-2022ல் முதலாம் ஆண்டில் 100 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டடப்பணிகள் ரூ.345 கோடியில் 2020 ஜூனில் துவங்கியது.கொரோனா காலத்தில் கட்டடப்பணிகள் பாதிக்கப்பட்டாலும் அதன்பின் வேகமாக பணிகள் நடந்தன.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையில் 2021-2022ல் முதலாம் ஆண்டில் 100 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டடப்பணிகள் ரூ.345 கோடியில் 2020 ஜூனில் துவங்கியது.கொரோனா காலத்தில் கட்டடப்பணிகள் பாதிக்கப்பட்டாலும் அதன்பின் வேகமாக பணிகள் நடந்தன. தற்போது 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளன.தேசிய மருத்துவ குழு நடப்பு 2021--2022ல் முதலாம் ஆண்டில் 100 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இங்கு 150 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில், மைக்ரோபயாலஜி துறைக்கான உபகரணங்கள் வராதது, மருத்துவக் கல்லுாரி நுாலகத்திற்கான புத்தகங்கள் வராதது உள்ளிட்ட சில காரணங்களை குறிப்பிட்டு முதலாம் ஆண்டில் இந்த ஆண்டு மட்டும் 100 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X