பொது செய்தி

தமிழ்நாடு

அக்.2ல்  மாணவர்களுக்கு பேச்சு போட்டி

Added : செப் 29, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில், மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்.2ல் மாணவர்களுக்கு பேச்சுபோட்டி நடக்கிறது.ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலையிலும், மதியம் கல்லுாரி மாணவர்களுக்கு என தனித்தனியே பேச்சுபோட்டி நடக்கிறது. ஒரு பள்ளி, கல்லுாரியிலிருந்து 2 பேர்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்வளர்ச்சி துறை சார்பில், மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்.2ல் மாணவர்களுக்கு பேச்சுபோட்டி நடக்கிறது.

ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலையிலும், மதியம் கல்லுாரி மாணவர்களுக்கு என தனித்தனியே பேச்சுபோட்டி நடக்கிறது. ஒரு பள்ளி, கல்லுாரியிலிருந்து 2 பேர் பங்கேற்கலாம்.தலைமையாசிரியர்கள்,முதல்வர்கள் தேர்வு செய்து பெயர் பட்டியலைத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு செப்.,29க்குள் (இன்று) அனுப்ப வேண்டும். மாவட்ட முதல் பரிசு ரூ.5ஆயிரம், 2வது ரூ.3ஆயிரம், மூன்றாவது ரூ.2ஆயிரம் வழங்கப்படும். இதில் அரசு பள்ளி மாணவர்கள் தனியாக தேர்வு செய்து சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரம்வழங்கப்படும் என தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் சுசிலா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X