இடியும் நிலையில் தங்கச்சிமடம் அரசு பள்ளி

Added : செப் 29, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : தங்கச்சிமடத்தில் 94 ஆண்டு கடந்த அரசு துவக்கப்பள்ளி இடியும் தருவாயில் உள்ளது. 1927ல் தங்கச்சிமடம் 2வது பஸ் ஸ்டாப்பில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் துவக்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளியில்6 ஆசிரியர்கள், 242 மாணவர்கள் உள்ளனர். பழமையான இப்பள்ளி ஓட்டு கட்டடத்தில் மாணவர்கள் படித்து வந்த நிலையில், இக்கட்டடத்தை பராமரிக்காமல் விட்டதால் சுவரில் மரங்கள் வளர்ந்து விரிசல்

ராமேஸ்வரம் : தங்கச்சிமடத்தில் 94 ஆண்டு கடந்த அரசு துவக்கப்பள்ளி இடியும் தருவாயில் உள்ளது. 1927ல் தங்கச்சிமடம் 2வது பஸ் ஸ்டாப்பில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் துவக்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளியில்6 ஆசிரியர்கள், 242 மாணவர்கள் உள்ளனர். பழமையான இப்பள்ளி ஓட்டு கட்டடத்தில் மாணவர்கள் படித்து வந்த நிலையில், இக்கட்டடத்தை பராமரிக்காமல் விட்டதால் சுவரில் மரங்கள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டும், ஓடுகள் உடைந்து காணப்படுகிறது.

வரும் மழை காலத்தில்இக்கட்டடம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளது.தற்போது கொரோனாவால் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், அக்.,ல் அனைத்து பள்ளியிலும் மாணவர்கள் பயில அரசு பரிசீலித்து வருவதால், இப்பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிக்க கட்டட வசதி இல்லை. மண்டபம் வட்டாரத்தில் அரசு துவக்கப்பள்ளியில் அதிக மாணவர்கள் கொண்ட இப்பள்ளியில் கட்டட வசதி கோரி உயர் அதிகாரியிடம் பலதடவை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. ஆபத்தான பள்ளி கட்டடத்தில் மாணவர்கள்படிக்க சென்றால் விபரீதம் ஏற்படுமோ என பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X