பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை சம்பளம் எப்ப தருவீங்க? துாய்மை பணியாளர் எதிர்பார்ப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பகுதியில், 60க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. இங்கு கழிவறைகள் சுத்தம் செய்யவும், வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபடவும் இதற்கான பணியாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படாமல், நிலுவை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: கிராம வறுமை ஒழிப்புத்திட்டத்தில்,

மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பகுதியில், 60க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. இங்கு கழிவறைகள் சுத்தம் செய்யவும், வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபடவும் இதற்கான பணியாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படாமல், நிலுவை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: கிராம வறுமை ஒழிப்புத்திட்டத்தில், இந்தப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான மாத ஊதியம் 3,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை.இதனால், அவர்கள் சிரமப்படுகின்றனர். சில மாதங்கள் ஆசிரியர்கள் பலர் சேர்ந்து, குறிப்பிட்ட தொகை வழங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'பல மாதம் நிலுவையாக உள்ள தொகையை வழங்குவதோடு, மாதம் தோறும் சீராக சம்பளம் வழங்க வேண்டும். இதோடு, மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X