பொது செய்தி

தமிழ்நாடு

தரமற்ற விதைகளால் சாகுபடியில் நஷ்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அருகே, குடிமங்கலம், வரதராஜ பு ரம், கோட்டமங்கலம் சுற்றுப்பகுதிகளில், கோவை வேளாண் பல்கலை.,யில், செடி முருங்கை விதை வாங்கி நடவு செய்துள்ளனர்.தரமற்ற விதைகளால், செடிகள் குறித்த நேரத்தில், காய்ப்புத்திறனுக்கு வராமல், ஏக்கருக்கு, 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை, நஷ்டம் ஏற்பட்டுள்ளது,' என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட

உடுமலை:உடுமலை அருகே, குடிமங்கலம், வரதராஜ பு ரம், கோட்டமங்கலம் சுற்றுப்பகுதிகளில், கோவை வேளாண் பல்கலை.,யில், செடி முருங்கை விதை வாங்கி நடவு செய்துள்ளனர்.தரமற்ற விதைகளால், செடிகள் குறித்த நேரத்தில், காய்ப்புத்திறனுக்கு வராமல், ஏக்கருக்கு, 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை, நஷ்டம் ஏற்பட்டுள்ளது,' என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஆலோசனைக்கூட்டம் குடிமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில், விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார்.மேலும், கோவை வேளாண் பல்கலை., வாயிலாக தரமற்ற விதைகள் வினியோகிக்கப்பட்டது குறித்து, முழுமையான விசாரணை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.தீர்வு கிடைக்காவிட்டால், வேளாண் பல்கலை., முன் போராட்டத்தில், ஈடுபடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X