பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரை வரவேற்கும் எம்.பி.,

Added : செப் 29, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் எம்.பி., பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் வரும் முதல்வர் ஸ்டாலின், பதவியேற்ற மே, 7 முதல், எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 2.09 கோடி ரேஷன் கார்டுதாரருக்கு தலா, 4,000 ரூபாய் கொரோனா நிதியுதவி; ஆவின் பால் லிட்டர், 3 ரூபாய் குறைப்பு; மக்கள் மனுக்கள் மீது தீர்வு காண, உங்கள் தொகுதியில் முதல்வர் துறை; அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அனைத்து

சேலம்: சேலம் எம்.பி., பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் வரும் முதல்வர் ஸ்டாலின், பதவியேற்ற மே, 7 முதல், எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 2.09 கோடி ரேஷன் கார்டுதாரருக்கு தலா, 4,000 ரூபாய் கொரோனா நிதியுதவி; ஆவின் பால் லிட்டர், 3 ரூபாய் குறைப்பு; மக்கள் மனுக்கள் மீது தீர்வு காண, உங்கள் தொகுதியில் முதல்வர் துறை; அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இட ஒதுக்கீடு பிரிவுகளிலும், 7.5 சதவீத இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி. திருநங்கையர், மகளிர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்; கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி, கல்வி, விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளுக்கு, 3 லட்சம் ரூபாய் நிதியுதவி; தொற்றால் இறந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடக துறையினருக்கு இழப்பீடு தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கல்; இந்தியாவில், முன் மாதிரி திட்டமான மக்களை தேடி மருத்துவ திட்டம். பதவியேற்ற, 4 மாதங்களுக்குள், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியது தி.மு.க., அரசு தான். எண்ணற்ற பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசு செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில், இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க வரும் முதல்வரை வரவேற்கிறேன்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X