சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு; இரு பெண்கள் கைது

Added : செப் 29, 2021
Share
Advertisement
நயினார்கோவில்: நயினார்கோவில் ஒன்றியம் நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன் மனைவி சரோஜா, 65. இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில்இருந்து பரமக்குடி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணித்துள்ளார். அதே பஸ்சில் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி ரஞ்சிதா, 27, சுரேஷ் மனைவி மாரி, 36, இருவரும் சென்றுள்ளனர்.அப்போது மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து அவரின் 6 பவுன் செயினை

நயினார்கோவில்: நயினார்கோவில் ஒன்றியம் நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன் மனைவி சரோஜா, 65. இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில்இருந்து பரமக்குடி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணித்துள்ளார். அதே பஸ்சில் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி ரஞ்சிதா, 27, சுரேஷ் மனைவி மாரி, 36, இருவரும் சென்றுள்ளனர்.

அப்போது மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து அவரின் 6 பவுன் செயினை திருடி நயினார்கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளனர். மூதாட்டி நகை காணாமல் போனதை பார்த்து அவருடன் வந்த இரு பெண்கள் மீது சந்தேகம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்ததன் பேரில், நயினார்கோவில் மளிகை கடையில் நின்ற இரு பெண்களையும் மக்கள் நகையுடன் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நயினார்கோவில் போலீசார் நகை திருடிய பெண்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X