பொது செய்தி

தமிழ்நாடு

திருடர்களை பிடித்த மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு

Added : செப் 29, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அம்மாபேட்டை, நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கதுரை, 40. மாற்றுத்திறனாளியான இவர், ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று காலை, 9:00 மணிக்கு, குமரகிரி பைபாஸ் நெசவாளர் காலனி திருப்பத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவரின் மொபைல்போனை, பைக்கில் வந்த இருவர் பறித்து தப்ப முயன்றனர். அவர்களை, தங்கதுரை ஆட்டோவில் துரத்தினார். ராயல் பார்க் பள்ளி வழியாக

சேலம்: சேலம், அம்மாபேட்டை, நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கதுரை, 40. மாற்றுத்திறனாளியான இவர், ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று காலை, 9:00 மணிக்கு, குமரகிரி பைபாஸ் நெசவாளர் காலனி திருப்பத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவரின் மொபைல்போனை, பைக்கில் வந்த இருவர் பறித்து தப்ப முயன்றனர். அவர்களை, தங்கதுரை ஆட்டோவில் துரத்தினார். ராயல் பார்க் பள்ளி வழியாக சென்றபோது, ஆட்டோவை, பைக் மீது மோதினார். பைக்கில் சென்றவர்கள் தடுமாறி விழுந்தனர். ஒருவரை தங்கதுரை பிடிக்க, மற்றொருவரை மக்கள் பிடித்து, அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், கிச்சிப்பாளையம், ஓந்தா பிள்ளைக்காட்டை சேர்ந்த அகமது பாஷா, 20, அம்மாபேட்டை, வித்யா நகர் எட்டாவது கிராஸ் பக்தவத்சலம், 28, என தெரிந்தது. மேலும், நேற்று காலை, பச்சப்பட்டி மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த, 12 ஆயிரத்து, 206 ரூபாய், இரு தாலியை கொள்ளை அடித்தது; கிச்சிப்பாளைத்தில், 'டியோ' மொபட்டை திருடி, அதன்மூலம், எருமாபாளையம் பிரிவு சாலையில், ஒருவரிடம், 'சாம்சங்' மொபைல் போன் பறித்தது; மீண்டும் மொபைல் பறிப்பில் ஈடுபட்டபோது, தங்கதுரையிடம் சிக்கியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். திருடர்களை பிடித்த மாற்றுத்திறனாளி டிரைவரை, மக்கள், போலீசார் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X