பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம்... அவசர தேவை! 1ம் தேதி முதல் முகாம் நடத்த முடிவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ரத்த தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தன்னார்வலர்கள், கொடையாளர்கள் ரத்த தானம் செய்து, மக்களை காக்க வேண்டுமென, டாக்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சைக்கு
  அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம்... அவசர தேவை! 1ம் தேதி முதல் முகாம் நடத்த முடிவு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ரத்த தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தன்னார்வலர்கள், கொடையாளர்கள் ரத்த தானம் செய்து, மக்களை காக்க வேண்டுமென, டாக்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

மருத்துவமனையில், 500 'யூனிட்' ரத்தம் சேமிக்கும் வகையில், ரத்த வங்கி உள்ளது. ரத்தம் சேகரிக்கப்பட்டு தினமும் கர்ப்பிணிகளின் பிரசவ சிகிச்சை, விபத்து சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும், கூடுதலாக உள்ள சேமிக்கப்பட்ட ரத்தம், தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகிறது. மாதத்துக்கு சராசரியாக, 240 முதல் 260 பெண்களுக்கு பிரசவம் நடக்கிறது. விபத்தில் சிக்கும் நபர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரசவ நேரத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு குறைந்தது, ஒன்று முதல் நான்கு 'யூனிட்' ரத்தம் தேவைப்படுகிறது. விபத்து மற்றும் கர்ப்பிணிகளுக்காக தினமும், 25 'யூனிட்'க்கும் அதிகமாக ரத்தம் தேவைப்படுகிறது.ரத்த தான முகாம்கள் நடத்தியும், மருத்துவமனையில் தன்னார்வலர்களிடமும் ரத்தம் பெறப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் துவங்கி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தொற்று பரவுமென்ற அச்சத்தில், பலரும் ரத்த தானம் செய்ய முன்வருவதில்லை.

மேலும், ரத்த தான முகாம்களும் நடத்தப்படுவது இல்லை. இதனால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தேவையான ரத்தம் கிடைக்காத நிலை ஏற்பட்டு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ரத்தம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், விபத்துகளில் காயமடைவோரின் உயிர் காக்க, அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென, டாக்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ அலுவலர் சரவண பிரகாஷ் மற்றும் ரத்த வங்கி செவிலியர்கள் கூறியதாவது:தடுப்பூசி செலுத்திய நபர்கள் மற்றும் கொரோனா பாதித்து குணமடைந்த நபர்கள், மூன்று மாதங்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம். இது குறித்த தெளிவான புரிதல் இல்லாததால் பலரும் ரத்த தானம் வழங்க தயங்குகின்றனர்.மேலும், கொரோனா பரவுமென்ற அச்சத்தில் ரத்த தானம் வழங்க முன்வருவதில்லை. இதற்கு முன் ஆண்டுக்கு, நான்காயிரம் முதல், 4,500 'யூனிட்' ரத்தம் சேகரித்து வந்தோம். தற்போது, ரத்த தானம் பெரும் அளவு குறைந்துள்ளதால், சேகரிக்கப்படும் ரத்தம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கே பற்றாக்குறையாக உள்ளது.
கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்துள்ளதால், வரும் அக்., 1ம் தேதி தேசிய ரத்த கொடையாளர்கள் தினம் முதல், கல்லுாரி, பொது இடங்களில் ரத்த தான முகாம்கள் நடத்தியும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ரத்தம் சேகரிக்க திட்டமிட்டுள்ளோம்.இதன் வாயிலாக, மருத்துவமனையின் தேவை பூர்த்தி செய்யப்படும்.
தன்னார்வலர்கள் அச்சமின்றி ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். அரிதான ரத்த வகை என குறிப்பிடப்படும், ஏ, பி, ஏபி, ஓ 'நெகடிவ்' பிரிவினர் மற்றும் தன்னார்வலர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.அவசர தேவையின் போது இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ரத்தம் சேகரிக்கப்படும். தானங்களில் சிறந்தது ரத்த தானம் என்பதை உணர்ந்து, மற்றவர்கள் உயிர் காக்கும் வகையில், அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X