பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் 11 பேருக்கு சிகிச்சை

Added : செப் 29, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம் முழுதும், டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது. இதனால், சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதுகுறித்து, சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் கூறுகையில், ''தற்போது மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள், 11 பேர் உள்ளனர். தவிர தினமும், 25க்கும் மேற்பட்டோர், வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்,'' என்றார்.

சேலம்: சேலம் மாவட்டம் முழுதும், டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது. இதனால், சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதுகுறித்து, சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் கூறுகையில், ''தற்போது மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள், 11 பேர் உள்ளனர். தவிர தினமும், 25க்கும் மேற்பட்டோர், வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்,'' என்றார். ரத்த பரிசோதனை தொழில் நுட்புனர்கள் கூறுகையில், 'குழந்தைகள், பெரியவர்கள் என, தினமும், 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில், தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள் கணிசமான அளவில் சிகிச்சை பெற்று வருவதாக, தனியார் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்' என்றனர். சுகாதாரப்பணி இணை இயக்குனர் நெடுமாறன் கூறுகையில், ''ஊரக பகுதியில், 12 அரசு மருத்துவமனைகளிலும், டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் எண்ணிக்கை விபரம் சரியாக தெரியவில்லை,'' என்றார். பூச்சியியல் துறை வல்லுனர் திருமலை கூறுகையில், ''மூன்று நாளாக முதல்வர் விழாவில் கவனம் செலுத்துவதால், டெங்கு பரப்பும், 'ஏடீஎஸ்' கொசு பற்றிய தற்போதைய புள்ளிவிபரம் தெரியவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X