பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கலைக்கல்லுாரியில் கலந்தாய்வு ஒத்திவைப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டின், மாணவர் சேர்க்கை நடந்தது. இளநிலைப்பாடப்பிரிவில், மொத்தம், 864 இடங்கள் உள்ள நிலையில், கலந்தாய்வு வாயிலாக, 847 மாணவ, மாணவியர் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், காலியாக உள்ள இளநிலை

உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டின், மாணவர் சேர்க்கை நடந்தது. இளநிலைப்பாடப்பிரிவில், மொத்தம், 864 இடங்கள் உள்ள நிலையில், கலந்தாய்வு வாயிலாக, 847 மாணவ, மாணவியர் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவு மற்றும் கூடுதலாகப்பெற்ற இடங்களையும் நிரப்ப, இறுதிக்கட்ட கலந்தாய்வு, நாளை, நடத்தப்படுவதாக இருந்தது.ஆனால், பல்கலைக்கழகத்தில் இருந்து, அதற்கான அனுமதி உத்தரவு, இதுநாள் வரை கிடைக்கப்பெறவில்லை.இதனால், இறுதிக்கட்ட கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, கல்லுாரி முதல்வர் கல்யாணி, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X