சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு விபத்தில் தியேட்டர் மேலாளர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அம்மாபேட்டை, ஜோதி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் சர்தார், 51. இவரது நண்பர், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சையத் பரூக், 41. இவர்கள், நேற்று முன்தினம் காலை, ஹீரோ ?ஹாண்டா பைக்கில் ஓமலூர் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தனர். சர்தார் ஓட்டினார். மாமாங்கம் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, பின்புறம் வந்த லாரி, பைக் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த இருவரையும் மக்கள் மீட்டு,

சேலம்: சேலம், அம்மாபேட்டை, ஜோதி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் சர்தார், 51. இவரது நண்பர், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சையத் பரூக், 41. இவர்கள், நேற்று முன்தினம் காலை, ஹீரோ ?ஹாண்டா பைக்கில் ஓமலூர் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தனர். சர்தார் ஓட்டினார். மாமாங்கம் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, பின்புறம் வந்த லாரி, பைக் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த இருவரையும் மக்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சையத் பரூக், நேற்று முன்தினம் உயிரிழந்தார். விபத்து புலனாய்வு பிரிவு போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.

* ஓமலூர், சாஸ்தா நகரை சேர்ந்தவர் வடிவேல், 70. ஓமலூரில் உள்ள தியேட்டரில், மேலாளராக பணிபுரிந்தார். இவர், நேற்று காலை, 10:15 மணிக்கு, புளியம்பட்டியைச் சேர்ந்த பொன்னுவேல், 67, என்பவருடன், ஹீரோ பைக்கில், ஓமலூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ரயில்வே பாலத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை முந்த முயன்றபோது, நிலை தடுமாறி, பின்புறம் அமர்ந்திருந்த வடிவேல் விழுந்தார். அப்போது, லாரி சக்கரத்தில் சிக்கி, அவர் சம்பவ இடத்தில் பலியானார். பொன்னுவேல் காயமின்றி தப்பினார். ஓமலூர் போலீசார், லாரியை கைப்பற்றி, தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X