பொது செய்தி

தமிழ்நாடு

தட்பவெப்பநிலையை தெரிந்து விவசாயம் செய்யுங்க! காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் 'அட்வைஸ்'

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஆனைமலை:'விவசாயிகள் லாபம் அடையவும், இழப்புகளை தவிர்க்கவும், தட்பவெப்பநிலையை தெரிந்து விவசாயம் செய்ய வேண்டும்,' என, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, கோவை வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்; புதுடில்லி இந்திய வானிலைத்துறையின் வானிலை சேவை மற்றும்
 தட்பவெப்பநிலையை தெரிந்து விவசாயம் செய்யுங்க! காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் 'அட்வைஸ்'

ஆனைமலை:'விவசாயிகள் லாபம் அடையவும், இழப்புகளை தவிர்க்கவும், தட்பவெப்பநிலையை தெரிந்து விவசாயம் செய்ய வேண்டும்,' என, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் தெரிவித்தார்.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, கோவை வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்; புதுடில்லி இந்திய வானிலைத்துறையின் வானிலை சேவை மற்றும் வேளாண்துறை சார்பில், 'வானிலை சார்ந்த வேளாண்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் முனைவர்கள் தீபாகரன், கோகிலவாணி, சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன், கோவை வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை இயக்குனரக முனைவர் தன்யா ஆகியோர் பங்கேற்றனர்.காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் பேசியதாவது:விவசாயிகள் லாபம் அடையவும், இழப்புகளை தவிர்க்கவும், தட்பவெப்பநிலையை தெரிந்துகொண்டு விவசாயம் செய்ய வேண்டும். எப்போது மழை வரும், எந்த அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும், காற்றின் வேகம், ஈரப்பதம் என அனைத்தையும் தெரிந்துகொள்வது அவசியம்.

தற்போது, 'உழவன்' செயலியில் வானிலை அறிக்கை மற்றும் அந்தந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்ற அறிவுரைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தட்பவெப்பநிலைக்கும் எந்தெந்த பயிர்களுக்கு என்ன வகை உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்த வேண்டும், எந்த வகையான நோய், பூச்சி தாக்குதல் ஏற்படும், நீர் மேலாண்மை உள்பட பல வகை தகவல்கள் வெளியிடப்படுகிறது.
மேலும், கால்நடைகள் பராமரிப்பு தகவல்களும் தெரிவிக்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு வானிலைக்கு ஏற்ப பயிர் வாரியாக தகவல்கள் தெரிவிக்க, 'ஆட்டோமேடெட் அக்ரோ அட்வைஸரி சர்வீஸ்' என்ற செயலி உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து விவசாயிகள் தங்களின் விபரங்களை பதிவு செய்தால், அவர்கள் தேர்வு செய்யும் பயிர்கள் வாரியாக அறிவுரைகள் வழங்கப்படும்.இவ்வாறு, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X