தமிழ்நாடு

போட்டித்தேர்வில் சாதிக்க புது முயற்சி: அரசு பள்ளி மாணவருக்கு உறைவிட பயிற்சி மையம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சேலம்: அரசு பள்ளி மாணவ, மாணவியரை, 'நீட்', ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கு தயார்படுத்த, சிறப்பு உறைவிட பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது.பள்ளி மாணவ, மாணவியரின், மருத்துவ படிப்புக்கு நீட், மத்திய தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர, ஜே.இ.இ., உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு, வருவாய் வழி திறனாய்வு, ஊரக திறனாய்வு, கே.வி.பி.ஒய்., உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சேலம்: அரசு பள்ளி மாணவ, மாணவியரை, 'நீட்', ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கு தயார்படுத்த, சிறப்பு உறைவிட பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரின், மருத்துவ படிப்புக்கு நீட், மத்திய தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர, ஜே.இ.இ., உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு, வருவாய் வழி திறனாய்வு, ஊரக திறனாய்வு, கே.வி.பி.ஒய்., உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர். இதற்காக, தமிழகத்தில் முதல்கட்டமாக, 10 மாவட்டங்களில், உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், ஆங்கில வழி, தமிழ் வழியில் படிக்கும், 9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவ, மாணவியரில், சிறந்து விளங்கும், 100 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, இரு ஆண்டுகள் பள்ளி படிப்போடு முழு நேர பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. தங்க விடுதி, உணவு வசதி, நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில், சேலம், கோட்டை வள்ளுவர் சிலை அருகே உள்ள அரசு மகளிர் பள்ளி வளாகத்தில், இச்சிறப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இட தேர்வில் சர்ச்சை: சிறப்பு மையம் அமைக்க, 200 மாணவர்களுக்கு வகுப்பறை, தங்கும் இட வசதி, சமையலறை உள்ளிட்டவை உருவாக்க வேண்டும். தற்காலிகமாக, சேலம் அரசு மகளிர் பள்ளியில் இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அங்கு ஏற்கனவே, 3,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கே, போதிய வகுப்பறை இல்லை. இந்நிலையில், சிறப்பு மையத்துக்கு பயன்படுத்தும்போது, வகுப்பறை பற்றாக்குறை ஏற்படும். உத்தமசோழபுரம், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், தற்போது மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. அங்குள்ள வகுப்பறைகள், விடுதி காலியாக உள்ளன. அதனால், சிறப்பு மையத்தை அங்கு அமைக்கலாம் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X