தக்காளி விலை சரிவு: ரோடுகளில் கொட்டப்படும் அவலம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அறுவடை நடந்து வருகிறது.உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் சந்தைகளுக்கு, நாள் தோறும், 14 கிலோ கொண்ட, 20 ஆயிரம் பெட்டிகள் வரை விற்பனைக்கு வருகிறது.வரத்து அதிகரித்த நிலையில், கேரளா மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்வது குறைந்துள்ளதால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த மாதம், 250 ரூபாய் வரை விற்ற பெட்டி, தற்போது 100 ரூபாயாக குறைந்துள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றம், ஒரு சில பகுதிகளில் தக்காளி செடிகளில் வாடல் நோய், இலைப்புள்ளி, ஊசிப்புழு தாக்குதல்என பல்வேறு பாதிப்புகளால், மகசூலும் குறைந்துள்ளது.ஏக்கருக்கு சராசரியாக, ஆயிரம் பெட்டி விளையும் நிலையில், தற்போது, 700 பெட்டியாக சரிந்துள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச்செயலாளர் பாலதண்டபாணி கூறியதாவது:அனைத்து காய்கறி சாகுபடி செய்த விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதித்து வருகின்றனர்.

உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி கூடுதலாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்த நிலையில், பறிப்பு கூலி, போக்குவரத்து செலவு கூட கட்டுபடியாகாத விலை நிலவுகிறது.நோய்த்தாக்குதல், தொழிலாளர்கள் பற்றாக்குறை, மருந்து, உரம் என கூடுதல் சாகுபடி செலவு செய்தாலும், விலை கிடைக்காமல், நஷ்டம் மட்டுமே மிஞ்சுகிறது.மகசூலும் குறைந்து வருகிறது. 40 முதல் 50 நாட்கள் வரை, காய் பறிக்கப்பட்டது, தற்போது, மூன்று பறிப்பு கூட மேற்கொள்ள முடியவில்லை.
வெயிலின் தாக்குதல் அதிகரித்ததால், பழங்கள் ஒரு சில நாட்களில் அழுகி விடுகிறது. விற்பனைக்கு வரும் தக்காளியில் பெரும்பகுதி ரோடுகளில் வீணாக கொட்டப்படும் சம்பவமும் நடந்து வருகிறது.கடந்த ஆறு மாதமாக, தக்காளி, வெங்காயம், கத்தரி, பீர்க்கன், பாகற்காய், பூசணி என தோட்டக்கலைப்பயிர்கள் தொடர் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.விரிவாக ஆய்வு செய்து, தேவையான சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை அதிகரிக்கவேண்டும்.இவ்வாறு, பாலதண்டபாணி தெரிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X