பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை பணி: மறுசீராய்வு குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில், நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாமில், நகரில் தரமின்றி மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை, மறுசீராய்வு செய்ய வேண்டும், என, மனுக்கள் அளிக்கப்பட்டன.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், 'தாமரைக்குளம் அரசு மருத்துவமனை அருகே, குமரேசன் நகர் என்ற பெயரில்
 பாதாள சாக்கடை பணி: மறுசீராய்வு குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில், நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாமில், நகரில் தரமின்றி மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை, மறுசீராய்வு செய்ய வேண்டும், என, மனுக்கள் அளிக்கப்பட்டன.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், 'தாமரைக்குளம் அரசு மருத்துவமனை அருகே, குமரேசன் நகர் என்ற பெயரில் குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டது. அங்கு, குடியிருப்போர் வழிபாடு செய்ய, விநாயகர் கோவில் கட்டுவதற்கு கொடுப்பதாக கூறப்பட்ட இடத்தை, சிலர் கிரயம் செய்துள்ளனர். அந்த இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்ககடை திட்டப் பணி தரமின்றி உள்ளது. ரோடுகளில் உள்ள பாதாள சாக்கடை ஆளிறங்கு குழிகள், அதன் மூடிகள், திட்டம் பயன்பாட்டுக்கு வரும் முன்பே சிதைந்து, உடைந்து காணப்படுகின்றன. பல இடங்களில், தோண்டப்பட்ட ரோடுகள் முறையாக சீரமைக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டத்தை ஆய்வு செய்து, தரமான முறையில் மறுசீராய்வு செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.ம.நீ.ம., சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், 'வடக்கு ஒன்றியம், புரவிபாளையம் ஊராட்சி, ஜமீன் களத்துார் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அக்கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாததால், தினமும் மூன்று கி.மீ., நடந்த சென்று, புரவிபாளையத்தில் இருந்து பஸ் வசதி பெற வேண்டியுள்ளது. டவுன் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202123:13:03 IST Report Abuse
Ram Pollachi விவசாய நிலத்திற்கு தனி பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் கேட்டு மனுவை போட்டு ஓய்ந்து போன ஜனங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் கேட்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X