பீமன் அருவியில் குளிக்க வனத்துறை தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பீமன் அருவியில் குளிக்க வனத்துறை தடை

Added : செப் 29, 2021
Share
ஜமுனாமரத்தூர்: பீமன் அருவியில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், ஜவ்வாதுமலையில் கூட்டாத்தூர், கோமுட்டேரி, மேல்பட்டு, நம்மியம்பட்டு, அமிர்த்தி, பட்டரைக்கடு உள்ளிட்ட கன மழை பெய்து வருகிறது. ஜவ்வாதுமலையில் பல்வேறு காட்டாறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால்,

ஜமுனாமரத்தூர்: பீமன் அருவியில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், ஜவ்வாதுமலையில் கூட்டாத்தூர், கோமுட்டேரி, மேல்பட்டு, நம்மியம்பட்டு, அமிர்த்தி, பட்டரைக்கடு உள்ளிட்ட கன மழை பெய்து வருகிறது. ஜவ்வாதுமலையில் பல்வேறு காட்டாறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் அமைந்துள்ள பீமன் அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. தடுப்பு கம்பிகளையும் தாண்டி வெள்ளம் வருவதால், ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X