பழைய பஸ் ஸ்டாண்டில் அதிகரிக்கும் நெரிசல் : ரவுண்டானாவில் திரும்புவதில் தீராத குழப்பம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில், வாகனங்கள் திரும்புவதற்கு நிலவும் குளறுபடிக்கு, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில், போக்குவரத்து அதிகமுள்ள, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, தளி ரோடு, பஸ் ஸ்டாண்ட் பை-பாஸ் ரோடு ஆகிய

உடுமலை;உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில், வாகனங்கள் திரும்புவதற்கு நிலவும் குளறுபடிக்கு, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில், போக்குவரத்து அதிகமுள்ள, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, தளி ரோடு, பஸ் ஸ்டாண்ட் பை-பாஸ் ரோடு ஆகிய ரோடுகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிகின்றன.இப்பகுதியில், எவ்வித போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளும் முன்பு இல்லை. முதற்கட்டமாக தளி ரோடு சந்திப்பில், தானியங்கி சிக்னல் அமைத்து, போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டனர்.சிக்னல் பகுதியில், நிற்கும் வாகனங்கள், நேரடியாக தளி ரோட்டில், நுழைவதை தவிர்க்க, சென்டர் மீடியன் கட்டப்பட்டது.மேற்குப்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், சென்டர்மீடியனை ஒட்டி பயணித்து, 'யு டர்ன்' எடுத்து மீண்டும் தளி ரோட்டில் இணைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், சந்திப்பு பகுதியை மேம்படுத்தும் வகையில், சென்டர் மீடியன் நிறைவு பெறும் பகுதி அருகிலும், காமராஜர் சிலையை ஒட்டியும் இருந்த, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.அங்கு, தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில், இணைய, சிறிய ரவுண்டானா அமைப்பு புதிதாக ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில், இந்த ரவுண்டானா பகுதியில், வாகனங்கள் திரும்புவதில் அதிக குளறுபடி நிலவுகிறது. பொள்ளாச்சி உட்பட மேற்கு பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் ரவுண்டானா செல்லாமல், அதற்கு முன்பாகவே திரும்புகின்றனர்; சிலர், ரவுண்டனா சென்று, திரும்பி தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றனர்.அதே வேளையில், பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் வாகனங்கள், தாராபுரம் ரோட்டுக்கு, அதே இடத்தில், திரும்புகின்றன.இதனால், காலை, மாலை நேரங்களில், போக்குவரத்தில் அதிக குழப்பம் ஏற்பட்டு, விபத்துகளும் ஏற்படுகிறது.எனவே போக்குவரத்து போலீசார், அப்பகுதியில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் குறித்தும், வாகனங்கள் திரும்புவது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X