பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையை நியாயமாக நடத்துவார்களா?

Added : செப் 29, 2021
Share
Advertisement
குடியாத்தம்: ''உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையை நியாயமாக நடத்துவார்களா என்ற சந்தேகம் உள்ளது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறினார். வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரான முனுசாமி, குடியாத்தத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., மிகப்பெரிய அளவு வெற்றியை பெறும். அதை தடுக்க, தி.மு.க.,வினர் வன்முறையில்

குடியாத்தம்: ''உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையை நியாயமாக நடத்துவார்களா என்ற சந்தேகம் உள்ளது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறினார். வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரான முனுசாமி, குடியாத்தத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., மிகப்பெரிய அளவு வெற்றியை பெறும். அதை தடுக்க, தி.மு.க.,வினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடப்பதற்கு முன்பே அராஜகம் செய்யும், தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணிக்கையை நியாயமாக நடத்துவார்களா என்ற சந்தேகம் உள்ளது. இதனால் முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், உள்ளாட்சி தேர்தலை நியாயமான முறையில் நடத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X