வருவாய் கோட்டத்தில் 21 பேருக்கு தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 21 பேருக்கு தொற்று

Added : செப் 29, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, மொத்தம், 21 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, மகாலட்சுமி நகர், அபிராமி ஆண்டாள் நகரில் தலா ஒருவர் என இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வடக்கு ஒன்றியத்தில், மாப்பிள்ளைகவுண்டன் புதுார், ஆச்சிபட்டி, செல்லாண்டிகவுண்டன்புதுார், வடக்கிபாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, மொத்தம், 21 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, மகாலட்சுமி நகர், அபிராமி ஆண்டாள் நகரில் தலா ஒருவர் என இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வடக்கு ஒன்றியத்தில், மாப்பிள்ளைகவுண்டன் புதுார், ஆச்சிபட்டி, செல்லாண்டிகவுண்டன்புதுார், வடக்கிபாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம், அனுப்பர்பாளையத்தில் தலா ஒருவர் என ஆறு பேர்; தெற்கு ஒன்றியத்தில் சூளேஸ்வரன்பட்டி, சமத்துார், மாக்கினாம்பட்டி, நாட்டுக்கல்பாளையத்தில் தலா ஒருவர் என நான்கு பேருக்கு தொற்று பாதித்தது. பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று, மொத்தம், 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கிணத்துக்கடவு தாலுகாவில், கோடங்கிபாளையம், கப்பளாங்கரை, சிறுகளந்தை பகுதியை சேர்ந்த, மூவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, பெரியபோது, கிழவன்புதுார், வேடசெந்துார், பெத்தநாயக்கனுார் பகுதியில், ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வால்பாறை தாலுகாவில், நடுமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 13 வயது பள்ளி மாணவி ஒருவர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானார். அரசு மருத்துவமனை கேர் சென்டரில், இரண்டு பேர் சிகிச்சை பெறுகின்றனர்.வருவாய் கோட்டத்தில், நேற்று, 21 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தவர்களின் குடும்பத்தினரை, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X