பொது செய்தி

தமிழ்நாடு

புதிய அரசு துவக்கப்பள்ளி தெற்கு ஒன்றியத்தில் திறப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் நல்லாம்பள்ளியில், டி.இ.எல்.சி., நிர்வாகத்தின் கீழ், அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி இயங்கி வந்தது. பள்ளி கட்டடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், டி.இ.எல்.சி., நிர்வாகம் பள்ளியை அரசிடம் ஒப்படைத்தது.இதையடுத்து, அரசு பள்ளிக் கல்வித்துறை வாயிலாக, புதிய கட்டடம் அமைக்கப்பட்டு, நல்லாம்பள்ளியில்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் நல்லாம்பள்ளியில், டி.இ.எல்.சி., நிர்வாகத்தின் கீழ், அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி இயங்கி வந்தது. பள்ளி கட்டடம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், டி.இ.எல்.சி., நிர்வாகம் பள்ளியை அரசிடம் ஒப்படைத்தது.இதையடுத்து, அரசு பள்ளிக் கல்வித்துறை வாயிலாக, புதிய கட்டடம் அமைக்கப்பட்டு, நல்லாம்பள்ளியில் புதிய அரசு துவக்கப்பள்ளி திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் கண்ணுசாமி முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் பிரசாத் வரவேற்றார்.எம்.பி., சண்முகசுந்தரம் பள்ளியை திறந்து வைத்தார். பள்ளிக்கு, கஞ்சம்பட்டி மற்றும் நம்பியமுத்துார் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டனர். இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள், ஒன்றாம் வகுப்பில், 13 பேர்; 2ம் வகுப்பில், 16 பேர்; 3ம் வகுப்பில், 14 பேர்; 4ம் வகுப்பில், 13 பேர்; 5ம் வகுப்பில், 23 பேர், இப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X