பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை எஸ்டேட்டில் புலி வனத்துறை கண்காணிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை, முடீஸ் பஜார் தேயிலை எஸ்டேட்டில் பதுங்கிய புலியை பிடிக்க, வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, மானாம்பள்ளி வனச்சரகம், வால்பாறை முடீஸ் பஜார் பகுதியில், புலி நடமாட்டம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து, புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தலைமையில்,
 தேயிலை எஸ்டேட்டில் புலி வனத்துறை கண்காணிப்பு

வால்பாறை:வால்பாறை, முடீஸ் பஜார் தேயிலை எஸ்டேட்டில் பதுங்கிய புலியை பிடிக்க, வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, மானாம்பள்ளி வனச்சரகம், வால்பாறை முடீஸ் பஜார் பகுதியில், புலி நடமாட்டம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து, புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தலைமையில், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, நேற்று மாலை வரை ஆய்வில் ஈடுபட்டனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முடீஸ் பகுதியில், மக்கள் கூறுவதன் அடிப்படையில், புலி சோர்வாக இருப்பது தெரிகிறது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.எனவே, வனப்பகுதிக்குள் உணவு தேட முடியாத நிலையில், தேயிலை காட்டு பகுதிக்கு வந்துள்ளது. புலி நடமாடும் இடம் உறுதியாக தெரிந்த பின், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டுள்ளோம். அது வரை,முடீஸ் பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X