கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

Added : செப் 29, 2021
Share
மஞ்சூர்:மஞ்சூர் அருகே, தங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஐவன் மோசஸ் தலைமை வகித்தார்.டாக்டர்கள் புரனேஷ், நிவேதா, ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி முன்னிலை வகித்தனர்.இதில், தங்காடு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, 50 கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள

மஞ்சூர்:மஞ்சூர் அருகே, தங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஐவன் மோசஸ் தலைமை வகித்தார்.டாக்டர்கள் புரனேஷ், நிவேதா, ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி முன்னிலை வகித்தனர்.
இதில், தங்காடு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, 50 கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மனநலம், உடல்நலம் பேணுதல் சத்தான உணவுகளை உட்கொள்ளுதல் உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.பின், செவிலியர்கள் கிருஷ்ணகுமாரி தலைமையில் அங்கன்வாடிபணியாளர்கள் மூலம், தாலி, வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டு, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X