பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறையினர் ஏமாற்றம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் தேவர்சோலையில் நேற்று கண்ணில் பட்ட புலி 'எஸ்கேப்' ஆனதால், வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையை சேர்ந்த சந்திரன்,51, என்பவரை 24ம் தேதி புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு, புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று இடங்களில் பரண் அமைத்து கண்காணிக்கின்றனர். ஐந்து இடங்களில் கூண்டு
 வனத்துறையினர் ஏமாற்றம்

கூடலுார்:கூடலுார் தேவர்சோலையில் நேற்று கண்ணில் பட்ட புலி 'எஸ்கேப்' ஆனதால், வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையை சேர்ந்த சந்திரன்,51, என்பவரை 24ம் தேதி புலி தாக்கி கொன்றது. அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு, புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று இடங்களில் பரண் அமைத்து கண்காணிக்கின்றனர். ஐந்து இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.நேற்று வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், சப்தமிட்டும், புலியை புதரில் இருந்து வெளியே விரட்டி, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். மாலை 3:00 மணிக்கு புதரில் இருந்து வெளியேவந்த புலி, மீண்டும் தேயிலை தோட்டம் வழியாக மற்றொரு வனப்பகுதிக்குள் சென்றது.இதனால், வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். அப்பகுதியில் மழை பெய்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.புலியை பிடிக்கும் வரை, மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் எஸ்டேட் குடியிருப்பில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்துக்கான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X