பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மருத்துவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில், 150 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, இடைகால மாற்று ஏற்பாடுடன் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே 'கால்ப் கிளப்' பகுதியில், 40 ஏக்கரில் மருத்துவ கல்லுாரி அமைகிறது. இதற்காக, மத்திய, மாநில அரசு சார்பில், 447 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஓராண்டுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.மருத்துவக்
 ஊட்டி மருத்துவ கல்லுாரியில்  மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு

ஊட்டி:ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில், 150 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, இடைகால மாற்று ஏற்பாடுடன் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே 'கால்ப் கிளப்' பகுதியில், 40 ஏக்கரில் மருத்துவ கல்லுாரி அமைகிறது. இதற்காக, மத்திய, மாநில அரசு சார்பில், 447 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஓராண்டுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.மருத்துவக் கல்லுாரி கட்டுமான பணியை, எம்.பி., ராஜா, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கல்லுாரி முதல்வர் மனோகரி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அதிகாரிகள் கூறுகையில்,'2021-22ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவக்க மருத்துவ கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பிட்ட நாளில் பணிகள் முடியவில்லை எனில், மத்திய அரசு அனுமதியுடன் இடைக்கால மாற்று ஏற்பாடுடன், மாணவர் சேர்க்கையுடன் வேறு பகுதியில் கல்லுாரி துவங்கப்படும். அதற்கான இடங்களை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்யும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X