சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரிக்கு கொலை மிரட்டல்: கோவையில் 7 பேர் கைது 

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோவை:இடத்தகராறில் வியாபாரியிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த தமிழக முன்னேற்ற கட்சியினர் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் தீபக் அரோரா, 39. இவர் இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் ஹெல்மெட் விற்பனை செய்து வருகிறார். இதற்காக மணியகாரம்பாளையத்தில் இடம் வாங்கி குடோன் அமைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, இவரது குடோனுக்கு

கோவை:இடத்தகராறில் வியாபாரியிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த தமிழக முன்னேற்ற கட்சியினர் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் தீபக் அரோரா, 39. இவர் இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் மற்றும் ஹெல்மெட் விற்பனை செய்து வருகிறார். இதற்காக மணியகாரம்பாளையத்தில் இடம் வாங்கி குடோன் அமைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, இவரது குடோனுக்கு ஏழு பேர் கும்பல் வந்தது.தங்களை தமிழக முன்னேற்ற கட்சியினர் என்று அறிமுகப்படுத்தி கொண்டவர்கள் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும், உடனடியாக குடோனை காலி செய்ய வேண்டும் என, தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தீபக் அரோரா, தனது இடத்து பத்திரத்தை காட்டி மறுத்தார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், உடனடியாக காலி செய்யவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் தீபக் புகார் அளித்தார். ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது உள்பட ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயராஜ், 52, சந்தோஷ், 52, ஜெகன், 40, தீபன், 36, மதன், 33, கதிரவன், 49, கருப்புசாமி, 35 ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.தொடர்ந்து ஏழு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X