பொது செய்தி

தமிழ்நாடு

பெயரளவுக்கு நடத்தை விதி... நடப்பதோ வேறு...! அத்துமீறும் கட்சிகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
அன்னுார்: 'மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், நடத்தை விதிகளையும், பல லட்சம் ரூபாய் செலவழிப்பதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை' என, புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலரை தேர்வு செய்ய, வரும் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. வார்டில், 59 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தி.மு.க., சார்பில், வடக்கு ஒன்றிய செயலாளர்
தேர்தல், நடத்தை விதி, அத்துமீறும் கட்சிகள், கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அன்னுார்: 'மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், நடத்தை விதிகளையும், பல லட்சம் ரூபாய் செலவழிப்பதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை' என, புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலரை தேர்வு செய்ய, வரும் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. வார்டில், 59 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர். 100 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.தி.மு.க., சார்பில், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன், அ.தி.மு.க., சார்பில், அவிநாசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி போட்டியிடுகின்றனர். இவர்களுடன், நாம் தமிழர் - அ.ம.மு.க., - மக்கள் நீதி மய்யம் - தே.மு.தி.க., ஆகிய அரசியல் கட்சியினரும், ஐந்து சுயேச்சைகளும் என, 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 13ம் தேதியே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, பொது இடங்களில், கொடிக்கம்பங்கள், பதாகைகள், அறிவிப்புகள் ஒட்டக்கூடாது. வாசகங்கள் எழுதக்கூடாது. தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் அவர்களுடைய அனுமதி கடிதம் பெற்று, சுவர் வாசகம் எழுதலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil newsஅப்படியே இருக்கு


ஆனால், அன்னுார் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில், பொது இடங்களில் தி.மு.க., - அ.தி.மு.க., - கம்யூ., - காங்., - விடுதலை சிறுத்தைகள் உட்பட கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. இவை அகற்றப்படவில்லை. இத்துடன் ஊராட்சிக்கு சொந்தமான மோட்டார் ரூம், பெரிய குப்பைத்தொட்டி, குடிநீர் மேல்நிலை தொட்டி, சமுதாய நலக்கூடம், பொது மயானம், பாலம், வாரசந்தை சுற்றுச்சுவர் என, பொது இடங்களில் கட்சிகளின் சின்னங்கள் உள்ளன. அங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தலைவர்களின் படங்கள் உள்ளன.

பறக்கும் படை அமைக்கப்பட்டும், தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டும், எந்த அரசியல் கட்சிகள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், போஸ்டர்கள் அகற்றப்படவில்லை.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு, 1.70 லட்சம் வரை செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இரண்டு பெரிய கட்சிகளும், தலா இரண்டு முறை மண்டபங்களில் ஊழியர் கூட்டம் நடத்தி விட்டனர். இந்த ஊழியர் கூட்டங்களில் தலா, 750 பேர் வரை பங்கேற்றனர். 750 பேருக்கான உணவு செலவு, மண்டப வாடகை, ஆளுயர ரோஜா மாலை என ஒவ்வொரு கூட்டத்துக்கும், குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர்.


கண்காணிப்பு அவசியம்


கட்சி பிரசாரத்துக்காக, வேறு ஊர்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்கள் கட்சிக்கொடி பொருத்தப்பட்ட கார்களில் ஊராட்சிகளில் வலம் வருகின்றனர். தேர்தல் பணியில் கட்சிக்கொடி பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். தினமும் சராசரியாக, 4 ஊராட்சிகளில் இரவு உணவுடன் கூட்டம் நடக்கிறது. இதற்கு ஒவ்வொரு நாளும், பல ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

தேர்தல், பறக்கும் படை அதிகாரிகள், கட்சிக் கொடியுடன் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி உள்ளதா, தினசரி செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும். தவறினால், அதிக செலவு செய்யும் வேட்பாளர்கள், எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையமும், கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
29-செப்-202113:00:39 IST Report Abuse
பாமரன் நொங்குகாட்டுல நம்ம கம்பெனி ஸ்ட்ராங்குன்னு சொன்னாய்ங்க... பேருக்கு கூடா நாம இருக்கிற மாதிரி நியூஸ்ல வரலை... டைரக்டா ஜெயிக்கற ஐடியாவோ...??? இந்த தேர்தலில் மெஷினு கிடையாதுன்னு யாராவது சொல்லுங்கப்பா...
Rate this:
Cancel
29-செப்-202111:46:19 IST Report Abuse
அப்புசாமி இந்த சுவரொட்டியின் மீது சாணி அடிங்க.
Rate this:
Cancel
29-செப்-202110:12:54 IST Report Abuse
சங்கிமக்கா banner வச்சா பதவி பறிக்கப்படும் னு சட்டம் கொண்டு வந்துட்டா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X