தமிழக அரசின் இந்த நடவடிக்கை பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: பள்ளிகள், கல்லுாரிகள், தியேட்டர்கள், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வாரத்திற்கு மூன்று நாட்கள் கோவில்கள் மட்டும் பூட்டப்படுகின்றன. அரசின் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்; கோவில்கள் அனைத்து நாட்களும் திறக்கப்பட வேண்டும்.தமிழக அரசின் இந்த நடவடிக்கை பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது. கோவில்கள் மட்டும்
தமிழக அரசின் இந்த நடவடிக்கை பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது

ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: பள்ளிகள், கல்லுாரிகள், தியேட்டர்கள், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வாரத்திற்கு மூன்று நாட்கள் கோவில்கள் மட்டும் பூட்டப்படுகின்றன. அரசின் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்; கோவில்கள் அனைத்து நாட்களும் திறக்கப்பட வேண்டும்.


தமிழக அரசின் இந்த நடவடிக்கை பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது. கோவில்கள் மட்டும் குறிவைக்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.



மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: ஈ.வெ.ரா.,வை விலக்கி விட்டு, தமிழ் தேசியம் பேசுவது, பருப்பு இல்லாமல் சாம்பார் வைப்பது போன்றதாகும்.


பருப்பு சாம்பார் வாயு கோளாறை ஏற்படுத்தும் என்பதால், பலரும் பருப்பு சாம்பாரை தொட்டு கூட பார்ப்பதில்லையே...!



யாதவ மகாசபை நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் அறிக்கை
: நெல்லை மாவட்டம், வள்ளியூரில் ஹிந்து கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் சர்ச் கட்ட முறைகேடாக நிலத்தை கைமாற்றிய அதிகாரியை, ஹிந்து சமய அறநிலையத்துறை, பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஹிந்து மதத்தை அழிக்கும் நோக்கில் செயல்படுபவர்களை இடைநீக்கம் செய்யாமல், பணிநீக்கம் செய்ய வேண்டும்!


சரியான யோசனை தான். செய்யுமா தமிழக அரசு?



மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை
: ரயில்வே துறையில் உ.பி.,யில் தேர்வு செய்யப்பட்டோர் சென்னையில் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களோ, நியமனத்திற்கு காத்துக் கொண்டுள்ளனர். இந்த அவல நிலை கண்டனத்திற்குரியது.


latest tamil news




உண்மையில் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம் தான். ஆனாலும், சென்னையில் கிளம்பும் ரயில்கள் பல, உ.பி.,க்கும் செல்கின்றன. உ.பி.,யில் புறப்படும் ரயில்கள் சென்னைக்கும் வருகின்றன. எனவே, இதில், மாநில வேறுபாடு பார்க்கக் கூடாது



தெலுங்கு பிரபல நடிகர் பவன் கல்யாண் பேச்சு: அதிகம் வரி செலுத்துவது திரைத்துறை தான். 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு, அதில் 4 கோடி ரூபாய் வரியாகவே போய்விடும். இது யாரிடமிருந்தும் பிடுங்கி சம்பாதித்த பணம் அல்ல. அவர்கள் உழைத்துச் சம்பாதித்தது.


சினிமா நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற குரல், எல்லா மாநிலங்களிலும் எழுந்துள்ளது. முக்கால்வாசி படங்கள் ஓடுவதில்லை. ஆனாலும், சம்பளம் மட்டும் உச்சத்தில் உள்ளது.



தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: முதலில் கோவில் நிலங்களில் வசிப்பவர்களிடம் ஒழுங்காக வாடகை பாக்கியை வசூல் செய்தாலே, 1,000 கோவில்களுக்கு திருப்பணி செய்யலாம். கோவில்களுக்கு காணிக்கையாக கொடுத்த நகையை தொடுவது நல்லதல்ல. பல முறைக்கேடுகளுக்கு வழிவகுக்கும்.


கோவில் நகைகளை உருக்க நினைக்கும் அரசுக்கு, முதலிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே!


Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
29-செப்-202119:55:18 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN .........................கற்பூரவாசனை தெரியுமா?????
Rate this:
Cancel
Subash - Chennai,இந்தியா
29-செப்-202117:24:16 IST Report Abuse
Subash அடிமைக்கும்பல் கோயில் ஐம்பொன் சிலைகளை திருடி விற்றபோது இந்த அறிவிலி அருசுண சம்பத்து எங்கே இருந்தான்? கோயில் சிலை திருட்டை விசாரணை செய்யக்கூடாது என்று கொடநாட்டான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான்.ஏன்? அவனும் அவன் கும்பலும் கோயில் சிலைகளை திருடியது உண்மைதானே....
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
29-செப்-202116:09:24 IST Report Abuse
Duruvesan தாங்க ரத்னம் நீ எந்த சர்ச்? பெந்தகோஷ்டி யா? சரியா பிரேயருக்கு போறியா? யேசப்பா காப்பாட்ருவார், ஆமென்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X