பொது செய்தி

தமிழ்நாடு

அகற்றப்படாமல் அச்சம் தரும் பிளக்ஸ்கள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகரில் அரசின் எச்சரிக்கைக்கும் அடங்காத வகையில் அச்சம் தரும்படி, அகற்றப்படாமல் பிளக்ஸ் பேனர் காணப்படுகிறது. செப்.,20க்குள் தமிழகத்தில் அனுமதி பெறாத, ஆபத்தான, பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள், தட்டிகள், போர்டுகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் ஓரளவு அகற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும், இதற்கான பணி துவங்கவில்லை. குறிப்பாக,

ஈரோடு: ஈரோடு மாநகரில் அரசின் எச்சரிக்கைக்கும் அடங்காத வகையில் அச்சம் தரும்படி, அகற்றப்படாமல் பிளக்ஸ் பேனர் காணப்படுகிறது. செப்.,20க்குள் தமிழகத்தில் அனுமதி பெறாத, ஆபத்தான, பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள், தட்டிகள், போர்டுகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் ஓரளவு அகற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும், இதற்கான பணி துவங்கவில்லை. குறிப்பாக, மாநகர பகுதியில் முழு அளவில் கடைகள் முன், சாலை மையத்தில், முக்கிய சந்திப்புகளில் பிரமாண்ட பிளக்ஸ்களுக்கு குறைவில்லை. குறிப்பாக பன்னீர்செல்வம் பூங்கா பகுதி, சுவஸ்திக் கார்னர், அரசு மருத்துவமனை ரவுண்டானா, கலெக்டர் அலுவலக சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, காளை மாட்டு சிலை பகுதி, பழையபாளையம், மேட்டுக்கடை பகுதி, திண்டல், டீச்சர்ஸ் காலனி என அனைத்து பிரதான இடங்களிலும், வாகனங்களில் வருவோர் படிக்கும் வகையிலான தனியார் விளம்பரமும், விழிப்புணர்வு வாசகத்தை சிறியதாகவும் போட்டுள்ளனர். அத்துடன் முறைகேடான மின் இணைப்பும் கொடுக்கப்பட்டு, இரவிலும் ஜொலிக்கின்றன. இதுபோன்ற பிளக்ஸ், பேனர்கள், தட்டிகளை அகற்ற மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X