பொது செய்தி

தமிழ்நாடு

தகாத வார்த்தை பேசி மிரட்டல்: எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், சிந்தன் நகரை சேர்ந்தவர் முருகேசன், 55; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் சைசிங் மில் கூலி தொழிலாளி. வெள்ளோடு மேட்டுப்பாளையம் லட்சுமிபுரத்தில், சாமியாத்தாளுக்கு சொந்தமான ஓட்டு வீட்டை, 2013ல் வாங்கினேன். மைத்துனர் லோகநாதன் பராமரித்து வருகிறார். அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து, குருசாமி அத்துமீறி

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், சிந்தன் நகரை சேர்ந்தவர் முருகேசன், 55; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் சைசிங் மில் கூலி தொழிலாளி. வெள்ளோடு மேட்டுப்பாளையம் லட்சுமிபுரத்தில், சாமியாத்தாளுக்கு சொந்தமான ஓட்டு வீட்டை, 2013ல் வாங்கினேன். மைத்துனர் லோகநாதன் பராமரித்து வருகிறார். அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து, குருசாமி அத்துமீறி நுழைந்து, தொந்தரவு செய்து வருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும், எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் புதிதாக வீடு கட்ட, பழைய வீட்டை ஆட்கள் மூலம், கடந்த, 23ல் இடிக்கும் பணியில் ஈடுபட்டேன். தங்கமுத்து, குருசாமி தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வெள்ளோடு போலீசில் புகார் தந்தும் விசாரிக்கவில்லை. கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X