சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடுபோன வாகனம் மீட்பு; வாலிபர் கைது

Added : செப் 29, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, திருட்டுப்போன சரக்கு வாகனத்தை மீட்ட போலீசார், ஒருவரை கைது செய்தனர். பு.புளியம்பட்டி, காராப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான மகேந்திரா மேக்ஸ் சரக்கு வாகனத்தை, செல்லம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் விஜயராஜ் ஓட்டி வருகிறார். கடந்த, 25ம் தேதி இரவு, அவர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை மறுநாள்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, திருட்டுப்போன சரக்கு வாகனத்தை மீட்ட போலீசார், ஒருவரை கைது செய்தனர். பு.புளியம்பட்டி, காராப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான மகேந்திரா மேக்ஸ் சரக்கு வாகனத்தை, செல்லம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் விஜயராஜ் ஓட்டி வருகிறார். கடந்த, 25ம் தேதி இரவு, அவர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை மறுநாள் காணவில்லை. புகாரின்படி புளியம்பட்டி போலீசார் தேடி வந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாகனம் நிற்பதாக, மாரிமுத்துவுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவர், வாகனத்தை மீட்டு ஆசாமி ஒருவரை பிடித்து, புளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், மேட்டுப்பாளையம், சங்கர் நகரை சேர்ந்த முகமது நவுபில், 21, என்பது தெரிந்தது. அதேபகுதியை சேர்ந்த முபாரக்குடன் சேர்ந்து திருடியதும் தெரிந்தது. முகமது நவுபிலை கைது செய்த போலீசார், சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். முபாரக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில், ஐந்து பேர் கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை திருடி, அவற்றை உடைத்து உதிரி பாகங்களை விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X