சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் மர்ம சாவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நார்த்தம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் தேன்மொழி, 32. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தேன்மொழி பாளையம் புதூரிலுள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பணியாற்றினார். கடந்த, 24ல் பணிக்கு செல்வதாக கூறிச்சென்ற தேன்மொழி வீடு திரும்பவில்லை. இது குறித்து ராஜேந்திரன்

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நார்த்தம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் தேன்மொழி, 32. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தேன்மொழி பாளையம் புதூரிலுள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பணியாற்றினார். கடந்த, 24ல் பணிக்கு செல்வதாக கூறிச்சென்ற தேன்மொழி வீடு திரும்பவில்லை. இது குறித்து ராஜேந்திரன் கடந்த, 25ல் மில்லில் விசாரித்தபோது, தேன்மொழி வேலைக்கு வராதது தெரிந்தது. அவரது புகாரின்படி தொப்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியிலுள்ள, 60 அடி பாலத்துக்கு கீழ், தேன்மொழியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X