சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவரை கத்தியால் வெட்டி வழிப்பறி; கும்பலுக்கு வலை

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஓசூர்: தளி அடுத்த எல்லசந்திரத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 36, கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான மற்றொரு மஞ்சுநாத், 26, என்பவரும் உறவினர்கள். கடந்த, 26ல் இரவு, பின்னமங்கலத்திலுள்ள உச்சனப்பள்ளி சாலையில், தனியார் உரக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த மூன்று வாலிபர்கள், வியாபாரி மஞ்சுநாத்திடம் தகராறு செய்து அவரை கத்தியால் வெட்டினர்.

ஓசூர்: தளி அடுத்த எல்லசந்திரத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 36, கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான மற்றொரு மஞ்சுநாத், 26, என்பவரும் உறவினர்கள். கடந்த, 26ல் இரவு, பின்னமங்கலத்திலுள்ள உச்சனப்பள்ளி சாலையில், தனியார் உரக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த மூன்று வாலிபர்கள், வியாபாரி மஞ்சுநாத்திடம் தகராறு செய்து அவரை கத்தியால் வெட்டினர். தட்டிக்கேட்ட கூலித்தொழிலாளி மஞ்சுநாத்தையும் கத்தியால் வெட்டிய கும்பல், அவரிடமிருந்த, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன் மற்றும் 5,000 ரூபாயை பறித்து சென்றது. காயமடைந்த இருவரும், மேல்சிகிச்சைக்கு ஓசூர் தனியார் மருத்துவமனையில் ?சேர்க்கப்பட்டனர். தளி எஸ்.ஐ., கதிரேசன் வழக்குப்பதிந்து மர்ம கும்பலை தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X