சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு; டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 29, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில், பொக்லைன் டிரைவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கிருஷ்ணகிரி அருகே, குப்பச்சிப்பாறையை சேர்ந்தவர், 18 வயது மாணவி. கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வந்தார். கடந்த, 2016 ஜூலை, 13ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் வேடியப்பன், 40,

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில், பொக்லைன் டிரைவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கிருஷ்ணகிரி அருகே, குப்பச்சிப்பாறையை சேர்ந்தவர், 18 வயது மாணவி. கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வந்தார். கடந்த, 2016 ஜூலை, 13ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் வேடியப்பன், 40, மாணவி மீது ஆசிட் ஊற்றியதில், மாணவிக்கு முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. குருபரப்பள்ளி போலீசார் வேடியப்பனை கைது செய்தனர். விசாரணையில், மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோரிடம் வற்புறுத்தியதும், அவர்கள் மறுத்த ஆத்திரத்தில் ஆசிட் ஊற்றியது தெரிந்தது. இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா, வேடியப்பனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X