பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோய் பாதித்தோருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை

Added : செப் 29, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால், கண் விழித்திரை நோய் பாதித்த, 45 வயது நோயாளிக்கு சிறப்பு லேசர் மூலம், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விழித்திரை மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் லேசர் சிகிச்சை, மருத்துவ கல்லூரி கண்பார்வை இழப்பு மற்றும் தடுப்பு திட்ட மேலாளர் டாக்டர்.கிருபாவதி, கண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால், கண் விழித்திரை நோய் பாதித்த, 45 வயது நோயாளிக்கு சிறப்பு லேசர் மூலம், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விழித்திரை மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் லேசர் சிகிச்சை, மருத்துவ கல்லூரி கண்பார்வை இழப்பு மற்றும் தடுப்பு திட்ட மேலாளர் டாக்டர்.கிருபாவதி, கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வனிதா, சத்யா, ஷகிலா, நித்யா குழுவினரால் செய்யப்பட்டது. இது குறித்து, மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். அசோகன் கூறியதாவது: கண் விழித்திரை பாதிப்பு லேசர் அறுவை கிசிச்சை, கண் தசை வளர்ச்சி தடுப்பு சிகிச்சை, கண் நீர்அழுத்த சிகிச்சை, விபத்துகளால் ஏற்படும் கண் தொடர்பான நோய் மற்றும் புரைக்குரிய நவீன அறுவை சிகிச்சையை மேற்கொள்ள, 15 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். தற்போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜா, டாக்டர்கள் ராஜலட்சுமி, மது உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X