ஏரியில் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

Added : செப் 29, 2021
Share
ஓசூர்: பேரிகையிலுள்ள சுல்தான் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாகவும், குடிநீர் பிரச்னை நிலவுவதாகவும், பஞ்., தலைவர் பிரவின்குமார் மற்றும் கவுன்சிலர் மஞ்சுளா ரவி ஆகியோர் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை மனு வழங்கினர். இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பொறியாளர் தீபாமணி ஆகியோர், ஏரியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பேரிகை சுல்தான் ஏரியை தூர்வாரி

ஓசூர்: பேரிகையிலுள்ள சுல்தான் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாகவும், குடிநீர் பிரச்னை நிலவுவதாகவும், பஞ்., தலைவர் பிரவின்குமார் மற்றும் கவுன்சிலர் மஞ்சுளா ரவி ஆகியோர் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை மனு வழங்கினர். இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பொறியாளர் தீபாமணி ஆகியோர், ஏரியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பேரிகை சுல்தான் ஏரியை தூர்வாரி கரை பலப்படுத்தப்படும். பேரிகை கிராமத்திலுள்ள ரிங்ரோடு மற்றும் தீர்த்தம் சாலையில், ஒன்றிய பொது நிதி ஒதுக்கப்பட்டு, ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின்மோட்டார் அமைத்து, தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம்மா உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X