பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைந்ததால் மஞ்சள் ஏலம் ரத்து

Added : செப் 29, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: மஞ்சள் வரத்து குறைந்ததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,ல் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகளும், ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். கொரோனாவுக்கு பிறகு ஏலம்

நாமகிரிப்பேட்டை: மஞ்சள் வரத்து குறைந்ததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,ல் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகளும், ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். கொரோனாவுக்கு பிறகு ஏலம் நடத்தப்பட்டாலும், மஞ்சள் வரத்து நிலையாக இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தது. கடந்த வாரம், 400 மூட்டைகளுக்கு மேல் மஞ்சள் விற்பனை இருந்தது. இந்த வாரம் வரத்து, 50 மூட்டைக்கும் குறைவாக இருந்ததால் ஆர்.சி.எம்.எஸ்.,சில் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. தனியார் மண்டிகளிலும் ஏலம் நடக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X